பாடசாலையின் வரலாறு
யாழ்ப்பாணத்திலே
உள்ள புகழ்பூத்த கல்லூரிகளின் வரிசையில் வைத்தீஸ்வராக் கல்லூரியும்
குறிப்பிடத்தக்கதொன்றாகும். கடந்த இருபதாம் நூற்றாண்டில் 1913 ஆம் ஆண்டு
ஆரம்பமான இக் கல்லூரி 21 ஆம் நூற்றாண்டில் (2013 ஆம் ஆண்டில்) நூற்றாண்டு விழாவை
வெகுவிமர்சையாகக் கொண்டாடியது.
கல்லூரியொன்றின் வளர்ச்சிப் பாதையில் ஒரு நூற்றாண்டு கால வலாறு சாதனைக்குரியதொன்றாகும்.தற்பொழுது இக் கல்லூரிக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் அதிபர் திரு. எம்.மகேந்திரன் அவர்களைப் போன்று அவருக்குமுன் அதிபராக விளங்கிய பலரும் இக் கல்லூரிக்கு பெரும் பங்காற்றியுள்ளார்கள்.கல்லூரியின் சிற்பிகளாக விளங்கிய முன்னோரது அரிய பணிகளின் ஓர் உன்னதமான சின்னமாக யாழ்ப்பாணத்தில் காட்சிதருகின்றது இக் கல்லூரி. 1913 ஆம் ஆண்டு பெரியார் தம்பு நாகமுத்து அவர்களால் தாபிக்கப்பட்ட இக் கல்லூரி இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்கு அரிய பணியாற்றிவரும் ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தினரால் பரிபாலனத் வந்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இக் கல்லூரி ஸ்ரீ இராமகிருஷ்ணரின் சிந்தனை வழி அடித்தளமிட்ட ஒரு பாரம்பரிய சிறப்பின் காரணமாக சமரச சன்மார்க்க நெறியுடன் கல்வி வளர்ச்சிக்கு அரிய பணியாற்றி வருகின்றது. 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற வள்ளுவப் பெருந்தகையின் வளமிக்க மகுடவாசகமாகக் கொண்ட இக் கல்லூரியில் கல்விகற்று சமூகத்தில் பல்வேறு பொறுப்புமிக்க பணிகளாற்றிச் சாதனை படைத்து வருகின்ற மாணவமணிகள் இக் கல்லூரிக்கு பெரும் பலமாக உள்ளார்கள்.
அடுத்த தலைமுறையினரும் இக் கல்லூரி நலனில் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார்கள்.
வைத்தீஸ்வரா
என்றும் வாழ்க!!!
No comments:
Post a Comment